என் மலர்
நீங்கள் தேடியது "பிரதமர் மோடி"
- மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஓம்பிர்லா இரங்கல் தெரிவித்தார்.
- காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. கூட்டத் தொடரின் கடைசி வாரத்தின் முதல் அமர்வு இன்று தொடங்கியது.
டெல்லியில் நேற்று வாக்குத் திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். அதோடு அவருக்கு அச்சுறுத்தல்களையும் விடுத்தனர்.
இந்த விவகாரத்தை ஆளும் பா.ஜ.ஜக உறுப்பினர்கள் எழுப்பினார்கள். காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஓம்பிர்லா இரங்கல் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பா.ஜ.கா எம்.பி.க்கள் சபையின் மையப் பகுதிக்கு வந்து காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பான பிரச்சினையை கிளப்பினார்கள்.
இதற்கு பதிலடியாக எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கோஷங்களை எழுப்பினார்கள். இந்த அமளியால் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினை கிளப்பியதால் 2 மணி வரை அைவ ஒத்தி வைக்கப்பட்டது.
இதே பிரச்சினையை மேல்சபையிலும் பா.ஜ.க உறுப்பினர்கள் கிளப்பினார்கள். மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா பேசியதாவது:-
காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இது காங்கிரஸ் கட்சியின் சிந்தனையையும், மனநிலையையும் காட்டுகிறது. ஒரு பிரதமருக்கு எதிராக இது போன்று பேசுவது கண்டிக்கத்தக்கது. இதற்காக எதிர்க்கட்சி தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
காங்கிரஸ் அரசியல் மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு சென்றுவிட்டது. இது கற்பனை செய்ய முடியாதது.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜனதா எம்.பி.க்களின் அமளியால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
- ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இதில், சம்யுக்தா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- இந்த படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா). இவர் நடித்து கடந்த 2021-ல் வெளியான படம் அகண்டா. இப்படம் ஹிட் அடித்தநிலையில், இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. போயபதி ஸ்ரீனு படத்தை இயக்கியுள்ளார்.
ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இதில், சம்யுக்தா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதி வில்லன் ரோலில் நடித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ள இப்படம் கடந்த வாரம் வெளியானது.
சனாதன தர்மம் குறித்து இப்படம் பேசுவதால் இப்படத்தி பார்க்க பிரதமர் மோடி ஆர்வமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பேசிய இயக்குநர் போயபட்டி சீனு, "அகண்டா 2 படம் குறித்து பிரதமர் மோடி கேள்விப்பட்டு, இவ்வளவு நல்ல படத்தை நாமும் பார்த்து ஆதரவளிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதனால் டெல்லியில் அவருக்கு இப்படத்தை பிரத்யேகமாக திரையிட உள்ளோம் என்று தெரிவித்தார்.
- தான் கண்ட போர்களில் எல்லாம் வெற்றி வாகை சூடிய மாவீரர்.
- முத்தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தர்.
பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா டெல்லியில் துணை ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பெரும்பிடுகு முத்தரையரின் தபால் தலையை வெளியிட்டார்.
இந்த நிலையில், பெரும்பிடுகு முத்தரையருக்கு நினைவு தபால் தலை வெளியிட்டதற்காக பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தான் கண்ட போர்களில் எல்லாம் வெற்றி வாகை சூடிய மாவீரர், முத்தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தர், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பெரும் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்திய அரசு சார்பில் அஞ்சல் தலை வெளியிட்டமைக்கு மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கும், மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் தமிழக மக்களின் சார்பிலும்,
அ.தி.மு.க. சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன் என்று கூறியுள்ளார்.
- இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடியது.
- இந்த கோப்பையை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற மகத்தான பெருமையை இந்திய அணி பெற்றது.
12 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.
இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஹாங்காங்கை எதிர்கொண்டது. இதன் முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனையான தமிழகத்தின் ஜோஸ்னா சின்னப்பா 7-3, 2-7, 7-5, 7-1 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் லீ கா யிக்கு அதிர்ச்சி அளித்தார். 2-வது ஆட்டத்தில் இந்தியாவின் அபய்சிங் 7-1, 7-4, 7-4 என்ற நேர் செட்டில் அலெக்ஸ் லாவை வீழ்த்தினார். 3-வது ஆட்டத்தில் இந்திய இளம் வீராங்கனை அனாஹத் சிங் 7-2, 7-2, 7-5 என்ற செட் கணக்கில் ஹோ டோமாட்டோ ஹோவை மடக்கினார். முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றதால் கடைசி ஆட்டத்தில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார் களம் இறங்க அவசியம் இல்லாமல் போய் விட்டது.
முடிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடியது. தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்தியா, இந்த கோப்பையை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற மகத்தான பெருமையையும் பெற்றது. இந்த வெற்றி, 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அறிமுகமாகும் ஸ்குவாஷ் போட்டியில் சாதிப்பதற்கு இந்தியாவுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.
இந்நிலையில் உலக கோப்பை ஸ்குவாஷ் கோப்பையை முதல் முறையாக வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அதில், உலக கோப்பை ஸ்குவாஷ் கோப்பையை முதல் முறையாக வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இந்திய வீரர்கள் ஜோஸ்னா சின்னப்பா, அபய்சிங், அனாஹத் சிங், வேலவன் செந்தில்குமார் ஆகியோர் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர். அவர்களின் வெற்றி முழு நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளது. இந்திய ஸ்குவாஷ் அணியின் வெற்றி நமது நாட்டை பெருமைப்படுத்தி இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.
- போண்டி கடற்கரையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.
- தாக்குதல் நடத்திய 2 பேர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி (Bondi) கடற்கரையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச் சூடு இன்று பிற்பகல் 2.17 மணியளவில் நடந்தது. தாக்குதல் நடத்திய 2 பேர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அப்போது,"பயங்கரவாத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸஅ தள பதிவி் கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவின் போன்டி கடற்கரையில் யூதர்களை குறிவைத்து கொடூரமாக நடந்த பயங்கர தாக்குதலை கண்டிக்கிறேன்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த துயரமான நேரத்தில் ஆஸ்திரேலியா மக்களுக்கு நாங்கள் துணையாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
- பாஜக இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 45 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இன்று நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தலைமையிலான UDF அதிக இடங்களில் முன்னிலை பெற்று காணப்படுகிறது.
அதே சமயம் கேரளாவில் பெரிய செல்வாக்கு இல்லாத பாஜக இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 45 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், கேரள உள்ளாட்சி தேர்தலில் திருவனந்புரம் மாநகராட்சியில் பாஜக முன்னிலை வகிக்கும் நிலையில் பிரதமர் மோடி பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பபதாவது:-
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக- என்டிஏ கூட்டணி வெற்றி கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை தருணம். கேரள மாநில மக்களின் விருப்பம், வளர்ச்சியை எங்களால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.
திருவனந்தபுரம் போன்ற துடிப்பான நகரத்தின் வளர்ச்சியை நோக்கி எங்கள் கட்சி பாடுபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது.
- திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
புதுடெல்லி:
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளதாவது:-
ரஜினிகாந்த் அவர்களின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.
அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
- பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசினார்.
- பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு வர்த்தக உறவு பற்றி பேசினர்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசினார். அந்தப் பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு வர்த்தக உறவு பற்றி பேசினர்.
வர்த்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு துறைகளில் இருநாடுகளின் உறவை இன்னும் விரிவுப்படுத்துவது பற்றி இருவரும் விவாதித்தனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அதிபர் டிரம்புடன் சுவாரஸ்மான உரையாடலை மேற்கொண்டேன். உரையாடல் சிறப்பானதாக இருந்தது. இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் பற்றி பேசினோம். பிராந்தியம் மற்றும் சர்வதேச நிலவரங்கள் பற்றி இருவரும் விவாதித்தோம். உலக அமைதி, ஸ்திரத்தன்மைக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படும் என பதிவிட்டுள்ளார்.
- முதல் கட்டமாக டிசம்பர் 15-ம் தேதி பிரதமர் மோடி ஜோர்டான் செல்கிறார்.
- இரண்டாவது கட்டமாக பிரதமர் மோடி 16-ம் தேதி எத்தியோப்பியா செல்கிறார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
முதல் கட்டமாக, மன்னர் 2-ம் அப்துல்லா பின் அல் ஹுசைனின் அழைப்பை ஏற்று டிசம்பர் 15-ம் தேதி பிரதமர் மோடி ஜோர்டான் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது ஜோர்டான் மன்னருடன் இருநாட்டு உறவுகள், பிராந்திய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இரண்டாவது கட்டமாக பிரதமர் மோடி 16-ம் தேதி எத்தியோப்பியா செல்கிறார். ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவிற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். அந்நாட்டின் பிரதமர் அபிய் அகமது அலியைச் சந்தித்து பிரதமர் மோடி இந்தியா-எத்தியோப்பியா இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்து உள்ளார்.
தனது சுற்றுப்பயணத்தின் கடைசி கட்டமாக 17-ம் தேதி பிரதமர் மோடி ஓமன் நாட்டிற்கு செல்கிறார். அந்நாட்டிற்கு பிரதமர் மோடி மேற்கொள்ள இருக்கும் 2-வது சுற்றுப்பயணம் இதுவாகும். இந்தப் பயணத்தின்போது இந்தியா-ஓமன் இடையிலான வர்த்தகம், முதலீடுகள், இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை.
- நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார்.
இந்தியாவின் கலாச்சாரம், தேசிய உணர்வை ஒளிரச் செய்தவர் மகாகவி பாரதியார் என பிரதமர் மோடி புகழந்துள்ளார்.
மேலும், மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:-
மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன.
இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார். நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார். தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பிரதமர் மோடியுடன் பேசினார்.
- பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2018-ம் ஆண்டு இந்தியா வந்திருந்தார்.
ஜெருசலேம்:
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்குப் பிறகு பாதுகாப்பு கவலை காரணமாக தனது பயணத்தை ஒத்தி வைத்தார் பிரதமர் நேதன்யாகு. நேதன்யாகு இந்தியா வரும் திட்டத்தை ரத்து செய்வது இது 3-வது முறையாகும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் செப்டம்பர் 9-ந்தேதி மற்றும் ஏப்ரல் மாதமும் தேர்தல் காரணமாக இந்திய பயணத்தை ரத்து செய்திருந்தார்.
பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2018-ம் ஆண்டு இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினார். இரு தலைவர்களும் மிக விரைவில் சந்திக்க ஒப்புக்கொண்டனர் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்.
- தீபாவளியை உலகளவில் எடுத்துச் செல்ல இந்தக் கவுரவம் உதவுகிறது என்றார்.
புதுடெல்லி:
டெல்லி செங்கோட்டையில் அரிய பாரம்பரிய கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அரசுகளுக்கு இடையோன குழுவின் 20வது அமர்வு கடந்த 8ம் தேதி துவங்கியது.
இந்தக் கூட்டத்தில் 78 நாடுகளிலிருந்து வந்த பல்வேறு பரிந்துரைகளை ஆய்வுசெய்த ஐ.நா. கலாசார நிறுவனம், தீபாவளி பண்டிகையை பட்டியலில் சேர்த்துள்ளது குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டது.
இதுதொடர்பாக, மத்திய கலாசாரத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள், மனித குலத்தின் கலாசார பாரம்பரியப் பட்டியலில் தீபாவளிப் பண்டிகையும் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் பதவி காலத்தில், இந்தியாவின் கலாசார பாரம்பரியங்களுக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்து வருகிறது.
தீபாவளியைக் கொண்டாடும் நோக்கமான, நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் போன்றவற்றை உலகளவில் எடுத்துச் செல்ல இந்தக் கவுரவம் உதவுகிறது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை தீபாவளி நமது கலாசாரம் மற்றும் வாழ்வியலுடன் மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. இது நமது நாகரிகத்தின் ஆன்மா. இது வெளிச்சத்தையும், நீதியையும் வெளிப்படுத்துகிறது. யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் தீபாவளி சேர்க்கப்படுவது இத்திருவிழாவின் உலகளாவிய பிரபலத்துக்கு மேலும் பங்களிக்கும். ஸ்ரீ ராமரின் கொள்கைகள் நம்மை என்றென்றும் வழிநடத்தட்டும் என பதிவிட்டுள்ளார்.






